நோன்பு வைத்த நிலையில் ஊசி போடுவதும் குளுக்கோஸ் ஏற்றுவதும் கூடுமா?

AbdurRaheem Anvaari

கேள்வி :178

நோன்பு வைத்த நிலையில் ஊசி போடுவதும் குளுக்கோஸ் ஏற்றுவதும் கூடுமா?*

 

 

 

*الجواب بعون الله الملك الوهاب ?*

 

 

أخذ الحقن في نهار رمضان للصائم له حالان

 

الأولى : أن تكون هذه الحقن مغذية بحيث تغني عن الطعام والشراب ، فهذه الحقن مفطرة لأنها بمعنى الأكل والشرب 

 

الثانية : ألا تكون مغذية ، فهذه لا تفطر ولا تؤثر على الصيام . ولا فرق في ذلك بين أن تكون هذه الحقن في الوريد أو في العضل 

 

فإذا كانت الإبرة المشار إليها غير مغذية فإن الصيام لا يفسد بها ولو أعطيت عن طريق الوريد ولا يلزمك شيء وصيامك صحيح

 

وإذا أمكن أن تكون هذه الحقن ليلاً فهو أولى ، احتياطاً للصيام

 

کذا فی الدر مع الرد:

الموجود فی حلقہ أثر داخل من المسام الذی ہوخلل البدن والمفطر إنما ہو الداخل من المنافذ ۔ 

 

 

رمضان میں روزہ دار کےلیےانجیکشن کے استعمال کی دوحالتیں ہیں :

 

پہلی حالت :

یہ انجیکشن مغذی ہوں یعنی بطور غذا استعمال کیے جاتے ہوں جوکھانے پینے سے مستغنی کردیں ، ایسے انجیکشن کے استعمال سے روزہ ٹوٹ جاتا ہے اس لیے کہ یہ کھانے پینے کے قائم مقام ہیں ۔

 

دوسری حالت :

وہ انجیکشن مغذی نہ ہوں ایسے انجیکشن کے استعمال سے روزہ نہیں ٹوٹتا ، اس میں کوئي فرق نہیں کہ یہ انجیکشن رگ میں لگایا جائے یا پھر عضلات میں ۔

 

لیکن احتیاط اسی میں ہے کہ یہ انجیکشن بھی رات کے وقت استعمال کیے جائيں تاکہ روزے میں احتیاط ہوسکے

 

روزے کی حالت میں انجکشن لگوانا جائز ہے، خواہ رگ میں لگوایا جائے یا گوشت میں؛  کیوں کہ انجکشن کے ذریعہ جو دوا بدن میں پہنچائی جاتی ہے وہ اصلی راستوں (Opening) (منفذ)سے نہیں، 

 

بلکہ رگوں یا مسامات کے ذریعہ بدن  میں  جاتی ہے، جب کہ روزہ فاسد ہونے کے لیے ضروری ہے کے بدن کے اصلی راستوں سے کوئی  چیز  جسم کے اندر پہنچے اور انجکشن میں ایسا نہیں ہوتا، 

 

لہٰذا روزہ کی حالت میں انجکشن لگانے سے روزہ فاسد نہیں ہوتا، 

بلا ضرورت روزے کا احساس نہ ہونے کے  لیے طاقت کا انجکشن یا ڈرپ لگانا مکروہ ہے۔

 

البتہ انجکشن میں مسامات کے ذریعہ دوا بدن میں پہنچائی جاتی ہے، منفذ کے ذریعہ سے نہیں، اس لئے روزہ کی حالت میں انجکشن لگوانے سے روزہ فاسد نہیں ہوگا

 

 

ரமலானுடைய பகல் காலங்களில் ஒரு நோன்பாளி உடலில் ஊசி போட்டுக் கொள்ளலாமா குளுக்கோஸ் ஏற்றலாமா ?

 

அவ்வாறு ஊசி போடுவதாலும் குளுக்கோஸ் ஏற்றுவதாலும் நோன்பு முறியுமா முறியாதா என்பதின் சட்டத்தினை வகுப்பதில் தற்கால அறிஞர் பெருமக்களுக்கிடையில் கருத்து மாற்றங்கள் உண்டு ,

 

சில அறிஞர்களின் ஆய்வின் பிரகாரம் 

உணவு ,ஆகாரத்தின் மூலமாக உடலுக்கு எந்தவொரு தெம்பும் சத்தும் கிடைக்குமோ 

அது ஊசியின் மூலமாகவும் குளுக்கோஸின் மூலமாகவும் கிடைக்கப்பெற்றால் அவ்வகை ஊசியும் குளுக்கோசும் நோன்பை முறித்துவிடும் எனவும், 

 

எது உணவின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் இருக்காதோ அவ்வகையான Injection, dribs வும்  

அது நரம்பின் மூலமாகவோ சதையின் மூலமாகவோ எவ்வகையில் எடுத்துக்கொண்டாலும் அது நோன்பை முறிக்காது எனவும் கூறுகின்றனர்,

 

ஆனால் சரியான கருத்தின்படி ஊசி போடுவதாலும் குளுக்கோஸ் ஏற்றுவதாலும் நோன்பு முறியாது 

 

ஊசியின் மூலம் மருந்து  ஏற்றினாலும் சரி சத்து ஏற்றினாலும் சரி 

 

ஏனெனில் மருந்தும் சத்தும் உடலிலுள்ள வெளிப்படையான துவாரங்களின் மூலமாக செலுத்தப்படவில்லை ,

 

உடலில் வெளிப்படையான துவாரங்களின் மூலம் ஏதாவது உள்ளே சென்றால் தான் நோன்பு முறியும். 

 

நமது உடலில் வெளிப்படையாக கண்ணுக்கு புலப்படுகின்றன நவ துவாரங்கள் உண்டு, 

கண்ணின் இரு துளைகள், காதின் இரு துளைகள், மூக்கின் இரு துளைகள், வாய்துளை, சிறுநீர் துளை மற்றும் மலத்துளை. 

இந்த ஒன்பது துவாரங்களின் மூலம் ஏதாவது உள்ளே சென்றால் நோன்பு முறிந்து விடும் எனலாம், 

 

ஆனால் நம்முடைய உடலில் கண்ணுக்குத் தெரியாத ஏகப்பட்ட துவாரங்கள் இருக்கின்றன.

 

உடலின் வியர்வை வெளியேறும் வழிகளும் உடலின் துவாரங்களாகும், ஆனால் அவை சாதாரணமாக நம் கண்களுக்குத் தெரிவதில்லை. 

 

வியர்வையை வெளியேற்றுவதற்காக உடலில் பல லட்சம் நுண்துளைகள் உள்ளனவாம், 

 

25 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான வியர்வை சுரப்பிகள் இவற்றின் அடியிலிருந்துசெயல்பட்டு நமது உடலின் வியர்வையை வெளியேற்றுகின்றவாம், 

 

ஒரு ஆய்வின் படி நமது உடலில் மூன்றரை கோடி ரோம துவாரங்களும் எட்டு கோடி வியர்வை துவாரங்களும் இருக்கின்றனவாம், 

 

இவ்வாறான கண்ணுக்குப் புலப்படாத துளைகளின் மூலமாக எந்தவொன்று சென்றாலும் அதனால் நோன்பு முறியாது ஏனெனில்

 

 

عَنْ عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُدْرِكُهُ الْفَجْرُ وَهُوَ جُنُبٌ مِنْ أَهْلِهِ ثُمَّ يَغْتَسِلُ وَيَصُومُ .

 

 

நபியவர்கள் ஸஹர் நேரம் முடிந்து ஃபஜ்ர் உதயமான பின்பும் கடமையான குளிப்பை குளித்திருக்கிறார்கள் அதோடு நோன்பையும் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். 

 

 

ஆதார நூல்கள் :

 

رواه والبخاري (1926) 

ومسلم (1109)

 

 

عَنْ بَعْضِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُبُّ عَلَى رَأْسِهِ الْمَاءَ وَهُوَ صَائِمٌ مِنْ الْعَطَشِ أَوْ مِنْ الْحَرِّ . 

 

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு வைத்த நிலையில் தாகத்தை தணித்துக் கொள்வதற்காகவும், வெப்பத்தை போக்கிக் கொள்வதற்காகவும் தமது தலை மீது தண்ணீரை ஊற்றிக் கொள்வார்கள் என ஸஹாபாக்கள் அறிவிக்கின்றார்கள்

 

 

ஆதார நூல் :

 

رواه أبو داود (2365)

 

 

இங்கு நாம் ஒரு விஷயத்தை  விளங்க வேண்டியுள்ளது, 

அதாவது குளிப்பதின் மூலம் உடலுக்கு உற்சாகமும் குளிர்ச்சியும் கிடைக்கிறது. நபியவர்களும் அந்த நோக்கத்திற்காக குளித்திருக்கிறார்கள். 

உற்சாகத்தை அடைந்திருக்கிறார்கள்,

 

தண்ணீர் உடலுக்குள்ளே செல்வதால் தான் உடலுக்கு குளிர்ச்சியும் உற்சாகமும் ஏற்படுகிறது. 

 

ஆனால் இங்கு வெளிப்படையான துவாரங்களின் மூலமாக தண்ணீர் உள்ளே செல்லவில்லை 

மாறாக கண்ணுக்கு புலப்படாத துளைகளின் மூலமாக சென்று உற்சாகத்தை தருகிறது ,

 

எனவே இதுபோன்ற நபிமொழிகளை மையமாகக்கொண்டு அறிஞர் பெருமக்கள் நோன்பு வைத்த நிலையில் எவ்வகையான Injection, Glucose, வும் எடுத்துக்கொள்ளலாம் என்கின்றனர்,

 

ஆயினும் பகல் காலங்களில் ஊசி போடுவதையும் குளுக்கோஸ் ஏற்றுவதையும் இரவில் ஒத்தி வைத்துக் கொள்வது ஏற்றமான செயலாகும் ,

 

எவ்வித நிர்ப்பந்த தேவையுமின்றி சத்து ஊசி போடுவதும் 

தக்க காரணமின்றி குளுக்கோஸ் ஏற்றுவதும் மக்ரூஹான செயலாகும், 

 

அவ்வாறான நிர்ப்பந்த தேவையிருந்தால் நோயின் காரணமாக நோன்பு வைக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக நோன்பை விட்டு விட்டு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான சலுகைகள் அவர்களுக்கு உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்

 

 

ஆதாரங்கள் :

 

 

("ماخذ :دار الافتاء جامعۃ العلوم الاسلامیۃ بنوری ٹاؤن

فتوی نمبر :144008201507

تاریخ اجراء :25-05-2019")

 

 

("فتاوی اللجنۃ الدائمۃ للبحوث العلمیۃ والافتاء" ( 10 / 252 )

 

("فتاوی شامی"، باب مایفسد الصوم وما لایفسد، مطلب یکرہ السر إذا خاف فوت الصبح ، زکریا ۳/۳۶۷، کراچی ۲/۳۹۵، کوئٹہ ۲/۱۳۴)

 

("فتاویٰ فیض الرسول،"(1/516)

 

("مجموع الفتاوی "( 15 / 257 )

 

("فتاوی الصیام "ص220 ) 

 

("المغني" (3/18)

 

 

 

 

*والله اعلم بالصواب ✍*

 

 

?பதிவு ?

?فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ வாட்ஸ் அப் தளம்

 

 

17/04/2021

04/09/1442

 

☪️சனிக் கிழமை☪️

 

Abdurraheem Anvaari 

عبد الرحیم انواری 2008

عفا اللہ عنہ 

دعا کی درخواست ہے

l?

l??? 

l??????

l????????


Mohamed Ilyas

44 Articles posts

Comments